சினிமா

“ரஜினி – கமல்” இணையும் படம் – “லோகேஷ் கனகராஜ்”

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியாகும் முதல் படமாக ‘மாஸ்டர்’ இருக்கும் என்று திரைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பின்னர் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 50-வது படமான இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த கேள்வி ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தற்போதைக்கு அந்தப் படம் குறித்து நான் பதில் சொல்ல முடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. என் அடுத்த படத்தை எழுத ஆரம்பித்திருக்கிறேன். மற்ற விஷயங்களை தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் தான் சொல்ல வேண்டும். இன்னும் நேரமிருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.