இந்தியா மட்டும் அல்லது பல நாடுகளில் ஆற்றில் காசு போடும் பழக்கம் இருந்து வருகிறது இதற்கு நாம் நினைத்து கொண்டிருக்கும் காரணம் ஆற்றில் காசு போட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுதான், ஆனால் உண்மை அதுவல்ல.
இதற்கு நாம் நினைத்து கொண்டிருக்கும் காரணம் ஆற்றில் காசு போட்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுதான், ஆனால் உண்மை அதுவல்ல.
பழங்காலத்தில் அனைத்து நாணயங்களும் செம்பு எனப்படும் தாமிரத்தால் செய்யப்பட்டவையாய் இருந்தது.
தாமிரம் மனித உடலுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு உலோகமாகும்.தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம்.
வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
அந்த காலத்தில் ஆற்றுநீரே குடிநீராக பயனப்டுத்தப்பட்டு வந்தது. எனவே ஆற்றில் நாணயத்தை போடுவது நம் உடலுக்கு தேவையான தாமிரத்தை தரக்கூடும் என நம் முன்னோர்கள் இந்த பழக்கத்தை கொண்டு வந்தனர்.நாளடைவில் எது கோவில்களில் பின்பற்ற பட்டு இதன் உண்மை நிலை யாரும் அறியாமல் , எதனை மூட நம்பிக்கையாக மட்டும் பார்க்க தொடக்கி விட்டனர்.
நம் முன்னோர்கள் ஆழ்ந்த அறிவும், அனுபவ ஞானமும் கொண்டு அணைத்து செயல்களிலும் அவர்களின் திறனை காட்டி உள்ளனர்.