புதிய சர்ச்சை!! காணாமல் போன முக்கிய விபரங்கள்.?

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியமான சஹ்ரானின் இரண்டு செல்போன்களில் இருந்த விபரங்கள் அமெரிக்காவில் வைத்து எப்படி காணாமல் போனது என்பது குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. பொலிஸார் இதுவரை பதில் அளிக்கவில்லை . முன்னாள் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பிரதானி, இந்த இரண்டு செல்போன்களை அமெரிக்க பொலிஸாரிடம் வழங்கியிருந்தார். அந்த இரண்டு செல்போன்களிலும் எதுவும் இல்லை என அமெரிக்காவின் எப்.பி.ஐ. பொலிஸார் சொல்லியிருந்தனர். ஆயினும் . அந்த செல்போன்களில் இருந்த விபரங்கள் திடீரென மாயமானது சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் என அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



