தமிழ்நாடு

PCR சோதனை கட்டணத்தை குறைத்து அதிரடி காட்டிய தமிழக அரசு..!

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து முழு விவரத்தை வெளியிட்டது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதிக சோதனைகளை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் கொரோனா PCR சோதனைக்காக 4,500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரூ.3000 ஆக தமிழக அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

பொதுவாக முதல் சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அந்த நபருக்கு வைரஸ் தாக்கம் இல்லை என்பதை உறுதி செய்ய மேலும் இரண்டு அடுத்தடுத்த சோதனைகள் செய்யப்பட வேண்டும். இப்படி செய்வதற்கு தனியார் மருத்துவமனையில் மூன்று சோதனைகளுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வரை செலவாகும். தமிழக அரசு இந்த கட்டணத்தை குறைத்துள்ளதால் மூன்று சோதனைகளுக்கு ஒன்பது ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த கட்டணம் தான் தனியார் மருத்துவமனையில் வசூலிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.