சினிமாதகவல்கள்தமிழ்நாடு

ட்விட்டரை அதிரவிட்ட தல ரசிகர்கள்…. தேசிய அளவில் முதலியிடத்தில் டிரெண்டாகும் #HBDDearestThalaAJITH….

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், “தல” என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித், இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த நேரத்தில் அஜித் தன் பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. மேலும் தன் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அஜித் பிறந்தநாளை கொண்டாட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேகை ரசிகர்கள் தற்போது அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஹேஷ்டேகை வைத்து தான் அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக் அறிவிக்கப்பட்ட வேகத்தில் ட்விட்டரில் தேசிய அளவில் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி டிரெண்டாக்க விடுவதில் அஜித் ரசிகர்கள் வல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அஜித்துக்கு அவர் ரசிகர்கள் தவிர்த்து பிற நடிகர்களின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு சாதாரண மெக்கானிக்காக வாழ்க்கையை துவங்கி இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராகியிருக்கிறார். கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம் என்பதற்கு அஜித் ஒரு சிறந்த உதாரணம்.

அஜித் பிறந்தநாள் அன்று அவர் நடித்து வரும் வலிமை படம் குறித்த அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்ல ராஜா என்று வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ட்வீட் செய்துவிட்டார்.

அவர் அப்டேட் கொடுக்காவிட்டால் என்ன நாம் தல பிறந்தநாளை கொண்டாடுவோம் என்று ரசிகர்கள் கிளம்பிவிட்டார்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.