ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெரேமியா நடித்து ஐஃபோன் மூலம் படமாக்கப்பட்ட ‘லாக்டவுன்’ எனும் முன்று நிமிட குறும்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
இந்த படத்தில் இளம் பெண்ணான ஆண்ட்ரியா ஜெரேமியா, தனது வீட்டில் தனியாக பியானோ வாசித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு, புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறார். இந்த பூட்டுதலுக்கு மத்தியில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளத் தயாராகிறார். அவர் கிளம்பும்போது அவரைச்சுற்றி பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பது போல் தெரிகிறது. அதைக்கண்டு அச்சப்படும் ஆண்ட்ரியா, ஒரு வழியாக புறப்பட, கதவைத் திறக்க முற்படும்போது, உன்மையான அச்சுறுத்தல் வீட்டுக்கு வெளியே தன்ன் உள்ளது என முடிக்கப்ப்டுகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தங்களை காத்துக்கொள்ள தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது செம வைரலாகிவருகிறது.
ஒரே நாளில் படமாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் முழுக்க முழுக்க மொபைல் ஃபோனைக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனை நிதின் ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் கார்த்திக் என்பவர் எடிட்டிங் செய்துள்ளார் என்பது சிறப்பு.