9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு!
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கிய நிலையில் கூடிய விரைவில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சற்று முன்னர் தமிழக அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்களுக்கும் அதே நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு மிகாமல் உட்கார வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.