‘இஞ்சினியரிங் காலேஜ் ஒப்பன் பண்ணுற தேதி அறிவிப்பு…’ ப்ராக்டிக்கல் மற்றும் தியரி எக்ஸாம் என்னைக்கு தொடங்குது…? – அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்…!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி மாதம் 18-ம் தேதி முதல் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. மாற்றாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் ஊரடங்குகளும் தளர்த்தபட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18-ம் தேதி திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்.18ம் தேதி தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மே 24-ம் தேதி செய்முறை தேர்வுகளும், ஜுன் 2-ம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது. இதேபோல, இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14-ம் தேதி முதல் ஏப்.12-ம் தேதி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஏப்.15ம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.
மேலும் நேற்று முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.