தகவல்கள்வர்த்தகம்

அதிக சம்பளத்தை கேட்டு பெற சில டிப்ஸ்..கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். வேலையில் சேரும்போது, சம்பளம் அதிகம் பெறுவதற்கான சில ஆலோசனைகளை பார்க்கலாம்.

சில சமயம் கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை எனில், நிர்வாகத்தினரிடம் கூறிவிட்டு தைரியமாக வெளியே வந்து விடலாம். இதுவும் ஒருவகையான உத்தியே. இதில் வெற்றியும் தோல்வியும் சரிவிகிதத்தில் இருக்கும். இச்சமயத்தில் நீங்கள் ஏற்கனவே வேலையில் இருப்பவர் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் வேலையில் இல்லாமல் இதுபோன்ற ‘ரிஸ்க்’களை எடுக்கக் கூடாது. வேலை இல்லையெனில் இரு தரப்பினரும் இறங்கி வந்து ஒரு குறிப்பிட்ட சம்பளத்திற்கு ஒத்துக் கொள்வது நல்லது.

சம்பளம் பேசி முடிவான பிறகு ‘ஆபர் லெட்டர்’ எனப்படும் கடிதத்தை அளிப்பார்கள். இது நிச்சயதார்த்தம் போன்றது. வேலையில் சேருவது கல்யாணம் போன்றது. வேலை, சம்பளம் போன்ற விஷயங்களுக்கு, சரி சொல்வதற்கு முன்பு யோசிக்கலாம். ஆனால் சரி சொன்ன பிறகு யோசிக்கக் கூடாது. சிலர் ‘ஆபர் லெட்டர்’ வாங்கியதற்கும், வேலையில் சேருவதுக்குமான இடைப்பட்ட நாட்களில் மனம்மாறி வேலையில் சேரமாட்டார்கள். இது, அவரது பெயருக்கு களங்கத்தை உண்டாக்கி விடும்.

ஆட்களை தேர்வு செய்வதற்கு விளம்பரம், எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என பல படிநிலைகளைத் தாண்டி உங்களை தேர்வு செய்திருப்பார்கள். இதற்கென பணமும், காலமும் செலவாகி இருக்கும். தேர்வு செய்யப்பட்டவர், கடைசி நேரத்தில் வரமுடியாது என்று கூறிவிட்டால் பணமும் காலமும் விரயம் ஆகிவிடும். எனவே அவர்கள் மீண்டும் ஒரு முறை ஆட்களை தேர்வு செய்ய வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உங்கள் முடிவை முதலிலேயே சொல்லி விடவேண்டும்.

அனைத்து நிறுவனங்களும் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று அடிக்கடி பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது. தொழில்நுட்ப நிறுவனங்களில் வருடத்திற்கு 15 சதவீத பணியாளர்கள் வேலையை விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் திறமையான நபர்களை விட ஓரளவுக்கு வேலை தெரிந்த நபர்களையே அவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள். எனவே குறைந்தது ஒரு வருடமாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில், நீங்கள் எவ்வளவு திறமையானவர் என்றாலும் நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்ள தயங்குகின்றன. எனவே அடிக்கடி தாவுவதை நிறுத்திக் கொள்வது அதிக சம்பளம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.