மீனில் வறுவல், பிரியாணி, குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மீனை வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புலாவ் அரிசி – ½ கிலோ
துண்டு மீன் – கால் கிலோ
வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மல்லித்தூள்,
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்,
சீரகம் -1 ஸ்பூன்
எலுமிச்சை – 1
கொத்தமல்லி இலை – 1 சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை
- மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அரிசியை ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனை போட்டு இதனுடன் மல்லித்தூள், சோம்பு, சீரகத்தூள், எலுமிச்சம் சாற்றை ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊற வைத்த மீன் துண்டுகளைப் எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- அடுத்து அதில் ஊற வைத்த அரிசி, உப்பு, மிளகாய்த் தூள், கொத்தமல்லி இலை மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு மேலாக மீனை வைத்து தம் போட்டு இறக்கினால் மீன் புலாவ் ரெடி.