உணவுஉணவுகள்

காலையில் செய்த சப்பாத்தி மீந்து விட்டதா.. ??அப்போ நூடுல்ஸ் பன்னலமே..சப்பாத்தி நூடுல்ஸ்..

காலையில் மீந்து போன சப்பாத்தியை வைத்து மாலையில் சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் செய்யலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 3

வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை

  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்
  • பிறகு இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்
  • பிறகு வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸ் இதனுள் சேர்க்கவும்
  • குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி குறைந்த தீயில் 2 நிமிடம் மூடி வைத்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
  • விருப்பப்பட்டால் இதனுடன் முட்டை அல்லது விருப்பப்பட்ட காய்கள் சேர்த்து கொள்ளவும்
குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.