ஜனநாயக நாடான இந்தியாவில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளதென விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் கோடிக்கணக்கானோர் ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், ‘புராரி’ பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுவரை மத்திய அரசுடன் நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் கேள்வி எழுப்பிய போது, ‘ஜனநாயக ரீதியில் அமைதியாக மக்கள் போராட்டம் நடத்த உரிமை இருக்கிறது. அதிகாரிகள் அதற்கு அவசியம் மக்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.