5′ வயசுலயே ‘கொரோனா’வால பெற்றோர்களை இழந்த… ‘சிறுவனின்’ ‘பிறந்தநாளை’க் கொண்டாட.. ஊரே ஒன்று கூடி செய்த மாஸ் ‘ஏற்பாடு’… நெகிழ்ச்சி ‘சம்பவம்’!!!
பல லட்சக்கணக்கான மக்கள், இந்த கொடிய தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. டெக்சாஸ் (Texas) அருகே சான் ஆன்டோனியோ என்னும் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனான ரைடன், கொரோனா தொற்றின் காரணமாக, தனது தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்துள்ளான். இதன் காரணமாக, ரைடனை அவனது பாட்டி கவனித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவன் ரைடனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டி, அவனது குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ளவர்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுவனின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாட வேண்டி, உலகம் முழுவதிலும் இருந்து உதவிகள் நாடி வர ரைடனின் பிறந்தநாளை சான் ஆண்டோனியோ பகுதி மக்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
சான் ஆண்டோனியோ காவல்துறை சார்பிலான வாகனங்கள் உட்பட பல வாகனங்களை கொண்டு சிறப்பு அணிவகுப்பும் ஒன்றை ரைடன் முன்னிலையில் நடத்தினர். அது மட்டுமில்லாமல், ரைடனுக்கு பிடித்தமான கேக் வகைகள், சாண்டா க்ளாஸ், டைனோசர் பொம்மைகள் ஆகியவையும் இடம்பெற்றிருந்தன.
சுமார் ஒரு மணி நேரம் சிறுவன் ரைடனுக்காக நடைபெற்ற நெகிழ்ச்சியான இந்த அணிவகுப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு வேண்டி சான் ஆண்டோனியோ மக்கள் செய்த இந்த காரியத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என உணர்ச்சி ததும்ப ரைடனின் பாட்டி தெரிவித்துள்ளார்.