தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பபட்டு, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிலையில் மாணவர்களின் வருகை பதிவு சரிபார்க்கப்பட்டது, அப்போது முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் உட்பட தரிவரிசைப்பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
இதையடுத்த காலை 9 மணிக்கு முதல் 50 இடங்களை பெற்ற மாணவர்கள் அழைப்பட்டிருந்தது. அதில் 35 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 16 வது இடம் பிடித்த மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார்.
வரலாற்றில் முதன் முறையாக மருத்துவப் படிப்பில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காதது கல்வி அலுவலகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு மாணவர்கள் இருப்பிட சான்றிதழை தவறாக அளித்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து மாணவர்களின் இருப்பிட சான்றிதழ் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் முறைகேடில் ஈடுபடும் மாணவர்களின் பெயர் எழுத்தப்பட்டு இருப்பிட சான்று சரிபார்பு குழுவால் பராமரிக்கப்பட்டு பின்னர் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.