தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்ற அரசின் அறிவிப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகள் திறப்பு – ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது தமிழக அரசின் வழக்கமாகிவிட்டது. கொரோனாவை விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன.
மக்களை மேலும் மேலும் குழப்பாதீர்கள்! என கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு – ஒத்திவைப்பு குழப்பங்கள் அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது.
முன்யோசனைகள் இன்றி அறிவித்து பின்வாங்குவது @CMOTamilNadu அரசின் வழக்கமாகிவிட்டது.#COVID19-ஐ விட இந்த குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதியூட்டுகின்றன.
மக்களை
மேலும் மேலும்
குழப்பாதீர்கள்! pic.twitter.com/6Ty9Mmt0Mw— M.K.Stalin (@mkstalin) November 12, 2020