குழந்தைகளுக்கு சாக்லேட் என்றாலே கொள்ளை பிரியம்..அந்த சாக்லேட்டை வைத்து ஒரு அருமையான ஸ்வீட் ரெசிபி பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
- 100 கிராம்டார்க் சாக்லேட்
- ஸ்பிரிங்கிள்ஸ் சிறிதளவு
செய்முறை :
- டார்க் சாக்லேட்டை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுப்பை அணைத்து அதன் மேல் ஒரு கண்ணாடி பவுல் லைத்து வெட்டிய சாக்லேட்டை அதில் சேர்க்கவும்.
- தண்ணீரில் உள்ள சூட்டினால் சாக்லேட் மெல்ல உருக ஆரம்பிக்கும்.
- நன்கு இளகி க்ரீம் பதம் வரும் வரை கலக்கி விடவும்
- உருகிய சாக்லேட் கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி வைக்கவும்
நீளமான மரக்குச்சிகளை டம்ளரில் விட்டு சாக்லேட்டால் புரட்டி பட்டர் பேப்பர் மேல் வைத்து அதன் மேல் ஸ்பிரிங்கிள்ஸ் தூவவும். - சுவையான சாக்லேட் கம்பி மத்தாப்பூ தயார்.
இந்த சாக்லேட் கம்பி மத்தாப்பை பிரிட்ஜ்யில் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.