உணவுஉணவுகள்தமிழ்நாடு

பாஸ்மதி அரிசிலே 5 நிமிடத்தில் செய்ய கூடிய சூப்பர் இனிப்பு வகை..

பாஸ்மதி அரிசியில் நாம் பிரியாணி செய்திருப்போம் ஆனால் இன்று வித்தியாசமாக ஒரு ஸ்வீட் வகையை செய்து பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள் :

  • ஒரு கப் பாஸ்மதி அரிசி
  • ஒரு கப் சர்க்கரை
  • ஒரு கப் பால்
  • கால் ஸ்பூன்மஞ்சள் ஃபுட் கலர்
  • கால் கப் நெய்
  • ஐந்துமுந்திரி பாதாம் தலா
  • சிறிது தேங்காய் பல்

செய்முறை:

  • பாஸ்மதியை இருபது நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து அரிசியை சேர்த்து வேக விட்டு வடித்து எடுக்கவும்.
  • ஒரு பேனில் ஒரு கப் பாலில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும்.
  • அதில் வேக வைத்த பாஸ்மதி சேர்த்து வற்றும் வரை கிளறவும்.
  • முந்திரி.பாதாம்.தேங்காய் பல் இவற்றை சிறு துண்டுகள் செய்து நெய்யில் வறுத்து கலவையில் சேர்த்து கிளறி பரிமாறவும்.

புது விதமான பாஸ்மதி அரிசியை வைத்து செய்ய கூடிய ஸ்வீட் தயார்.
பாஸ்மதி அரிசி பிரியர்களுக்கு எது நிச்சயம் பிடிக்கும்.ட்ரை பண்ணி பாருங்க .

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.