கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 1.09 கோடி ரூபாய் மதிப்புடையை தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விமானங்கள் தீவிர கண்காணிப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவைக்கு நேற்று வந்தது.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரி தகவல் கிடைத்ததை அடுத்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவைக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்தனர். அப்போது பயணிகள் இரண்டு பேர் தங்களது இடுப்புப் பகுதியில் போஸ்ட் போல் தங்கத்தை மாற்றி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 1.2 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 62 லட்சத்து 66 ஆயிரம் இதுதொடர்பாக அவர்கள் இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் அந்த விமானத்தில் பயணம் செய்த 5 பயணிகளும் சந்தேகத்தின்பேரில் பரிசோதனை செய்ததில் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் பலசரக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.