உதவித்தொகை நிறுத்தமா? அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்த விளக்கம்…
அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக வந்த செய்தி தவறு என்று அண்ணா பல்கலைகழகம் விளக்கம் அளித்துள்ளது.அண்ணாவின் பெயரால் PhD மாணவர்களுக்கு மாதந்தோறும் 16,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த தொகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆராய்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித்தொகை 16000 ரூபாயிலிருந்து 20,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது இதனால் மாணவர்களுக்கு மாதந்தோறும் 4000 கூடுதலாக கிடைக்க உள்ளது.அதே சமயம் ஆராய்ச்சி மாணவர்களின் ஆராய்ச்சி சார்ந்த இதர செலவினங்களுக்காக ஆண்டொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் நிறுத்தப்பட்டுள்ளது.