தயிர் கத்தரிக்காய் கிரேவி எப்படி செய்வது…
தயிர் கத்தரிக்காய் கிரேவி சாதத்திற்கு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
முதலில் தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.பின் வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கத்தரிக்காயை சுருங்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.பின் அதே எண்ணெயில் கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அரைத்த தக்காளி விழுது சேர்த்துக்கொள்ளுங்கள்.தக்காளி வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.பின் தயிர் சேர்த்து வதக்குங்கள். தற்போது வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
கால் கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.அவ்வளவுதான் தயிர் கத்தரிக்காய் கிரேவி தயார்.