உணவுகள்

‘வேப்பம்பூ ரசம்’… எப்படி செய்வது?

வேப்பம்பூ ரசம் செய்து அனைவரும் சாப்பிடலாம். கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும். அதில் ரசம் வைப்பது எப்படி என்பது குறித்து காணலாம்.2 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து அதில் தக்காளிப் பழங்களை போட்டு நன்கு பிசைய வேண்டும்.வெந்தயம், துவரம் பருப்பு, இரண்டையும் லேசாக வறுத்துப் பொடி செய்து புளித்தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வரும் போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வற்றல் போட்டு கடுகு பொரிந்ததும் காயம், கறிவேப்பிலை, போட்டுத் தாளித்து கொட்டவும்.பின்பு வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்து கொதிக்கும் ரசத்தில் கொட்டி ரசத்தை கீழே இறக்கி வையுங்கள்.அதனுடன் கொத்தமல்லி தழையை கிள்ளி சேர்த்து மூடி வைக்கவும்.அவ்வளவு தான் வேப்பம்பூ ரசம் ரெடி…!

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.