ஆம்புலன்ஸ்க்கு நியாயமான கட்டணத்தை அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆம்புலன்ஸ் சேவைக்கு நியாயமான கட்டணத்தை மாநில அரசுகள் நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மாநிலங்களில் இயங்கும் ஆம்புலன்ஸ்கள் கொரோனாவை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அசோக் பூஷண் முன்பு விசாரணைக்கு வந்தபோது,ஆம்புலன்ஸ் சேவைக்கு மாநில அரசுகள் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்ட உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்தார்.மாநில அரசுகள் போதிய ஆம்புலன்ஸ் சேவையை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கூறிய நீதிபதி, கொரோனா நோயாளிகளுக்கு உதவ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.