பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்…
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதால், குறைந்திருந்த வாகனப் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றில் இருந்து மாறாமல் ₹ 85.04-க்கு விற்பனை ஆகிறது. டீசல் விலையும் மாறாமல் நேற்றைய விலையான ₹78.58-க்கே விற்பனை ஆகிறது.
கோவையில் பெட்ரோல் விலை 85.66 ரூபாயாகவும், டீசல் விலை 79.05 ரூபாயாகவும், மதுரையில் பெட்ரோல் விலை 85.62 ரூபாயாகவும், டீசல் விலை 79.18 ரூபாயாகவும், திருச்சியில் பெட்ரோல் விலை 85.61 ரூபாயாகவும், டீசல் விலை 79.18 ரூபாயாகவும், நெல்லையில் பெட்ரோல் விலை 85.42 ரூபாயாகவும், டீசல் விலை 79.001 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மார்ச் மாத மத்தியில், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு, கலால் வரி உயர்த்தப்பட்டதால், டீசல் விலை 82 நாட்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.