நடுவர் மீது தவறுதலாக பந்தை அடித்த ஜோகோவிச் – அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் நடுவே, கோபத்தில் நடுவர் மீது தெரியாமல் பந்தை அடித்ததால் நட்சத்திர வீரரான ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார். ஸ்பெயின் நாட்டு வீரர் கரினோ பஸ்தாவுடன் மோதிய ஜோகோவிச், முதல் செட்டில் அவரை விட ஒரு புள்ளி குறைவாக எடுத்திருந்தார்.
HOLY CRAP. Djokovic defaulted after he inadvertently hits a ball and strikes a line judge in the neck. She had to leave. pic.twitter.com/BECdydrKFw
— Mark Armstrong (@ArmstrongABC11) September 6, 2020
இதனால் விரக்தி அடைந்த ஜோகோவிச், டென்னிஸ் பந்தை கோபத்தில் பின்னால் அடித்தபோது, அங்கு நின்றிருந்த பெண் நடுவர் முகத்தில் வேகமாக அடித்தது. இதில் நிலைதடுமாறி நடுவர் கீழே சாய்ந்தார். இதனை அடுத்து போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜோகோவிச் யு.எஸ்.ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்