கல்விச் செலவு தொகையை வழங்கவில்லை – பள்ளிக்கல்வி செயலர் ஆஜராக உத்தரவு…
மாறு கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செலவு தொகையை வழங்காதது தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவருக்கு செலவுத்தொகையாக 11,000 வழங்கப்படும் என 2017-18-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவருக்கு 32,000 ரூபாய் செலவிடும் நிலையில்,தனியார் பள்ளிகளில் 11,000 மட்டும் நிர்ணயிப்பது தவறு என வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை அமல்படுத்த அரசு தரப்பில் மேலும் 4 வார அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே இரு முறை அவகாசம் வழங்கியும் நிலுவை தொகையை வழங்காததைச் சுட்டிக்காட்டி, வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.