விதிகளை மீறி 100 சதவீதம் கட்டணம் பெற்றதாக புகார் – 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்
சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 17ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் அளிக்கும் வாய்மொழி, எழுத்துப்பூர்வமான புகார்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விசாரணை செய்ய வேண்டும் எனக் உத்தரவிடப்பட்டது.100 சதவீதம் கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு செப்டம்பர் 7ஆம் தேதி விசாரனைக்கு வரவுள்ளதால், தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் 14 சிபிஎஸ்இ பள்ளிகளும், 12 மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் விதிகளை மீறி 100 சதவீதம் கட்டணம் பெற்றதாக புகார்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வந்தன.அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 18 பள்ளிகள் உயர்நீதிமன்றத்தின் விதிகளை மீறி கட்டணம் வசூல் செய்துள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சம்பந்த பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் கோரி மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.