வெண்டைக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!
வெண்டைக்காயை பலரும் அதன் வழவழப்புத் தன்மைப் பிடிக்காமல் சாப்பிட மாட்டார்கள். சிலர் அந்த வழவழப்புப் போக நன்கு வதக்கி சமைப்பார்கள். ஆனால் அதன் வழவழப்புப் பசை போன்ற அமிலத்தில்தான் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? அவை என்னென்ன பார்க்கலாம். வெண்டைக்காயில் உள்ள அந்த வழவழப்புத் திரவம் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. அதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டால் இந்த பிரச்னையை சரி செய்யலாம்.
இந்த வழவழப்புத் திரவம் தான் வயிற்றில் உள்ள குடலை சுத்தம் செய்து அங்கிருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க உதவும். இதனால் வரும் வாய் துர்நாற்றமும் இருக்காது. இளம் வெண்டைக்காய் பிஞ்சுகளை நறுக்கி அதனுடன் சர்க்கரை அரை ஸ்பூன் கலந்து சாறு போல் தயாரித்து சாப்பிட இருமல் குணமாகுமாம். அதேபோல் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலும் குணமாகுமாம். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், அனீமியா, பார்வைக் குறைபாடு, வயிற்றுப் புண் என பல நோய் , உடல் உபாதைகளுக்கும் வெண்டைக்காய் சிறந்த துணை.
கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் வெண்டைக்காயில் இருக்கிறது. எனவே கர்ப்பிணிகள் அதன் வழவழப்பு திரவம் குறையாமல் வாரம் 2 முறையேனும் சமைத்து சாப்பிடலாம். வெண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் அடிக்கடி சாப்பிடலாம். இதனால் நோய் தொற்று , சளி , இருமல் போன்றவற்றை வராமல் தடுக்கலாம். கொழுப்பைக் குறைக்க நினைத்தாலும் வெண்டைக்காயை தாராளமாக சாப்பிடலாம். இது கெட்டக் கொழுப்புகளஒக் கரைக்க உதவும். அதோடு 100 கிராம் வெண்டைக்காயில் 66 கலோரிகளே உள்ளன. எனவே பயமின்றி சாப்பிடலாம்.