தமிழ்நாடு

சென்னையில் தொடங்கிய பேருந்து சேவை..!

கொரோனவை கட்டுப்படுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பொது போக்குவரத்து, கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள்ளாக இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 19,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கைகளை தூய்மைபடுத்துவதற்காக பேருந்துகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.பேருந்துகளில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவர். சென்னை மாநகரப் பகுதிகளில் 3300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 மாதங்களாக வெறிச்சோடி போயிருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இன்று காலை முதலே மக்கள் நடமாட தொடங்கியுள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.