“தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. தான்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக, அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தை எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த எழுச்சி சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக, அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தை எல்.முருகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த எழுச்சி சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அதன்படி சென்னை மண்டலத்துக்கு கரு.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மண்டலங்களுக்கு, பாஜக மாநில பொதுசெயலாளர் கே.டி. ராகவன் பொறுப்பாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராக பேராசிரியர் சீனிவாசனும் நியமிக்கப்பட்டுள்ளனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி பொறுப்பாளராக, நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் மண்டலம் தேர்தல் பொறுப்பாளராக மாநில பொது செயலாளர் செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் பேசிய எல்.முருகன், சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். மாணவர்கள் கூடுதலான மொழியை கற்பிக்க தேசிய கல்விக் கொள்கையை பாஜக கொண்டு வந்தால், அதனை தடுத்து திமுக நவீன தீண்டாமையை உருவாக்குவதாகவும், ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது எனவும் தெரிவித்தார்
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக செயற்குழுக் கூட்டத்தில் திமுக-வை தேவையின்றி ஜே.பி.நட்டா சீண்டியிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். செயற்குழுக் கூட்டத்தில் திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளை மத்திய ஆட்சியாளர்களை பறிக்கும்போது, மக்களின் மனதில் ஆட்சிசெய்யும் ஜனநாயக இயக்கமான திமுக, குரல் கொடுக்கவே செய்யும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பண்பாட்டிற்கும், இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் ஒரே எதிரியாக பாஜக திகழ்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.