சென்னையில் பல்வேறு கொலை, அடிதடி, ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்ற வழங்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் என்பவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சென்னையை அடுத்த நியூ அவடி சாலையில் ரவுடி சங்கரை அயனாவரம் காவல் ஆய்வாளர் நட்ராஜ் மற்றும் காவலர் முபாரக் ஆகியோர் பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சங்கர், காவலர் முபாரக்கை தாக்கி வெட்டியுள்ளார். இதைப்பார்த்த ஆய்வாளர் நட்ராஜ், உடனே துப்பாகியால் ரவுடி சங்கரை சுட்டுள்ளார்.
இதையடுத்து, ரவுடி சங்கர், படுகாயமடைந்த காவலர் முபாரக் ஆகியோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, சிகிச்சை பலனின்றி ரவுடி சங்கர் உயிரிழந்தார். ரவுடி சங்கரால் தாக்கப்பட்ட காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் உள்ளார். ரவுடி சங்கர் மீது, 4 கொலை வழக்குள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி, ஆட்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.