நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு!!!
ஆக்லாந்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் வரும் செப்டம்பர் 19ம் தேதி பொதுத்தேர்தல் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 102 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவி வருவதால் இந்த தேர்தல் அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து 2 வார ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலை தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் அண்மையில் கோரிக்கை வைத்திருந்தன. இதனையடுத்து பொதுத் தேர்தலை தள்ளி வைப்பதாக பிரதமர்அறிவித்துள்ளார். அந்நாட்டு சட்டப்படி பிரதமர் தேர்தலை 2 மாதம் வரை தள்ளி வைக்கலாம். ஆனால் மீண்டும் தேர்தல் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்றும் ஜெசிந்தா கூறியுள்ளார்.