“கமலா ஹாரிஸ்” தேர்வுக்கு “ஒபாமா” பாராட்டு..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்வு செய்துள்ளார். இந்தத் தேர்வை கமலா ஹாரிஸ் தேர்வுக்கு ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்திருக்கும் செய்தியில், “துணை அதிபரை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான, கஷ்டமான முடிவு. நீங்கள் ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம் அந்த தருணங்களில் சரியான தீர்வையும், ஆலோசனைகளையும் வழங்குபவர் உங்கள் அருகில் இருப்பது முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
“கமலா ஹாரிஸை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். அவர் இந்த பதவிக்கு தயாராகியிருக்கிறார். அரசியல் சாசனத்தை காக்கும் வேலையில் எப்போதும் இருப்பதுடன், நீதி தேவைப்படும் மக்களின் பக்கத்தில் நிற்பதை, தனது அரசியல் வாழ்வு முழுவதும் செய்து வருபவர்” என்று புகழாரம் கூட்டியுள்ளார். கமலா ஹாரிஸின் பெற்றோர் அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள். தந்தை ஜமைக்காவையும், தாய் இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.