கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வியும் பெரிதும் பா திப்படைந்துள்ளது.
இதனால் பல பாடசாலைகள் ஒன்லைன் மூலமாக பாடம் நடத்தி வருகின்றன.இந்நிலையில்,அரச பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்காக,அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார்.
மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பாடம் நடத்தும் கடலூர் அரச பள்ளி ஆசிரியைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் பாடசாலைகள் திறக்கப்படாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என கருதிய கடலூர் நடுவீரப்பட்டு அரச மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஹாலச்சுமி, வாட்ஸ்அப் இல் குரூப் ஒன்றை உருவாக்கினார்.அதில் பாடம் எடுத்தும் வந்துள்ளார்.
ஏழை எளிய மாணவர்களுக்கு வீட்டிற்கு நேரில் சென்று சமூக இடைவெளியுடன் பாடம் எடுத்து வழிமுறைகளையும் மன அழுத்தத்தையும் குறைக்க விழிப்புணர்வுடன் படம் நடத்தி வந்தார்.இதையறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி,ஆசிரியர் மஹாலச்சுமிக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியாளர் சந்திரசேகர சகாமுரி ஆசிரியையை நேரில் சென்று வாழ்த்துக் கூறியுள்ளார்.தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒன்லைனில் பாடம் கற்க போதிய வசதிகள் இருக்கும். ஆனால்,அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை.இதனை மனதில் கொண்டு நேரில் சென்று பாடம் கற்பிக்கும் இந்த ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியதே.