தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ செங்குட்டுவன் மற்றும் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் காந்தி என நேற்று முன் தினம் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்க பாண்டியனுக்கு தொற்று கண்டறியப்பட்டது.இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதிமுக சட்டபேரவை உறுப்பினர் கோவிந்தராஜ்-க்கு இன்று தொற்று உறுதியான நிலையில், அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 3 அமைச்சர்கள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சரிபார்க்கவும்
Close
-
அதிமுக கொடியுடன் தமிழகம் நோக்கி சசிகலா
4 days முன்பு