உலகம்தொழில்நுட்பம்வர்த்தகம்

சீன தயாரிப்புகளுக்கு எதிரான தென் கொரிய நிறுவனமான “சாம்சங்”.

சீன தயாரிப்புகளுக்கு எதிரான இந்தியர்களின் மனநிலையை தென் கொரிய நிறுவனமான சாம்சங் “துளி கூட வீணடிக்காமல்” பயன்படுத்திக்கொள்ள விரும்புவது போல் தெரிகிறது. கடந்த சில மாதங்களில் மட்டுமே சாம்சங் நிறுவனம் பல பட்ஜெட் மற்றும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவிட்டது. இந்நிலைப்பாட்டில் சாம்சங் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான தொடரான கேலக்ஸி எம் சிரீஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் ஆகி, வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று இந்தியாவில் விற்பனைக்கு என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் மாடல் ஆகும். இது கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி M31 ஸ்மார்ட்போனை பின்தொடரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ஒரு சில சான்றிதழ் வலைத்தளங்களில் மட்டுமே வெளிவந்துள்ளன. எனவே ஒரு சில விவரக்குறிப்புகளை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் இன்னமும் மறைக்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிடவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதியில் தான் இது சந்தைக்கு வரும் என்றும் கடந்த மே மாத தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜூலை மாதமே அறிமுகமாகி, ஆகஸ்ட் மாதமே விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடப்படும், மேலும் ஆகஸ்ட் மாதத்தில் அமேசான் வழியாக விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் பிற சில்லறை விற்பனை தளங்களின் வழியாகவும் வாங்க கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.20,000 என்கிற புள்ளியை சுற்றி எங்காவது ஒரு இடத்தில் அமரலாம். இருப்பினும் இப்போதைக்கு, சாம்சங்நிறுவனம் அதன் கேலக்ஸி எம் 31 எஸ் குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை

சான்றிதழ் வலைத்தளங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனின் ஒரு சில அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. கீக்பெஞ்ச், டி.யூ.வி ரைன்லேண்ட் மற்றும் செக்யூரிட்டி கொரியா தளங்களில் இது மாடல் நம்பர் SM-M317F என்கிற பெயரின் காணப்பட்டுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியலில் இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 SoC மற்றும் 6 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை வெளிப்படுத்துகிறது. TUV ரைன்லேண்ட் பட்டியலானது இதே ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் வரும் என்று பரிந்துரைக்கிறது.பின்னர் இது செக்யூரிட்டி கொரியாவால் சான்றளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி இது 128 ஜிபி சேமிப்பகத்துடன் வரலாம், உடன் AMOLED டிஸ்பிளே மற்றும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாரை கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.