தகவல்கள்

இளைஞர் தீக்குளிப்பு: நடந்தது என்ன?

ஆம்பூர் அடுத்த புதுமனை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான முகிலன். இவரது மனைவி 25 வயதான நிலா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பிரசன்னா, 3 வயதில் ஜனனி மற்றும் 6 மாத கைக்குழந்தை பிரியதர்ஷினி உள்ளனர். முகிலன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே புறவழிச்சாலை வழியாக சென்றுள்ளார்.

அங்கு வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் முகிலனை வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். குழந்தைக்கு மருந்து வாங்க மருந்தகத்திற்கு செல்வதாக அவர் கூறியுள்ளார். அருகில் உள்ள மருந்தகத்தில் மருந்து இல்லாததால் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மருந்தகத்திற்கு செல்தற்காக வந்ததாக கூறியுள்ளார். மேலும் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுவதாகவும், வாகனத்தை திருப்பி தருமாறும் போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவலர் சந்திரசேகர், திருப்பித் தர மறுத்துள்ளார்.மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஊர்காவல் படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் எடுத்துக்கொண்டு ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்.


வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் வீட்டுக்குச் சென்று மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு வாகன சோதனை நடைபெற்ற இடத்தில் காவலர்கள் முன்னிலையிலேயே தீ வைத்துக்கொண்டார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தான் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவுகிறது. சாலையில் அவர் படுத்துக் கொண்ட நிலையில் அங்கு வந்த வேறொரு வாகனம் மூலம் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் குவிந்த முகிலனின் உறவினர்கள் அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 91 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர். தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக வாகன சோதனையின் போது பணியில் இருந்த காவலர்கள் சந்திரசேகர், லட்சுமணன், விஜயகுமார் மற்றும் பட்டாலியன் போலீஸ் செல்வமணி அவர்கள் உடன் பணியிலிருந்த ஊர்வல் படையைச் சேர்ந்த கல்பனா, ராஜேஷ், ஜனனி ஆகிய 7 பேரும் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. கூறினார்

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.