சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது!
சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரையிலான பாதிப்பு எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. 15 ஆவது நாளாக ஆயிரத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஐஐடி வளாகம், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.