எம்.ஜி.ஆர்.நகரில் தீவிர தொற்று, 23 தெருக்கள் கொண்ட சாலை மூடப்பட்டது…!
எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, 23 தெருக்கள் கொண்ட சாலை மூடப்பட்டது.சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில், சென்னை மாநகராட்சி பட்டியலில், நேற்று வரை, கோடம்பாக்கம் மண்டலத்தில், 1,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில், எம்.ஜி.ஆர். நகர், 138வது வார்டில், கே.கே.சாலை அமைந்துள்ளது. இதில், 23 தெருக்கள் உள்ளன.இங்கு, எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட், அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு, கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டது.கே.கே.சாலையில் மட்டும், 60க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், நாளுக்கு நாள், தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், கே.கே.சாலை முழுதும், நேற்று மூடப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. மேலும், இச்சாலையில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.