உயிரிழப்பு எண்ணிக்கையை மாற்றிய அமெரிக்கா..!
கொவைட்-19 நோய் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மாற்றும் வகையில், பல்வேறு மாநில அரசுகளை ஒத்துழைக்கச் செய்யும் விதம், நோய் கட்டுப்பாட்டு மையத்திற்கு அமெரிக்க அரசு நிர்பந்தம் திணித்துள்ளது என்று தி டெய்லி பீஸ்ட் என்ற செய்தி இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பல மாநிலங்களில் வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கை வினோதமான முறையில் குறைந்து வருகிறது.இது குறித்து மின்னிசோடா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் ஆய்வு மற்றும் கொள்கை மையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தற்போதைய வைரஸ் பரிசோதனை தரவுகள் மூலம் மட்டுமே, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்வதற்கான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட முடியாது என்றும், அமெரிக்க சுகாதாரம் மற்றும் பொதுச் சேவை வாரியத்தால் வைரஸ் பரிசோதனையின் கண்காணிப்புக்கான சிறப்பு பிரிவு நிறுவப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.