தெற்கு வங்கக் கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று 5.30 மணிக்கு மேற்குவங்கத்திற்கும், வங்க தேசத்திற்கும் இடையே கரையை கடந்தது. அப்போது கடுமையாக மழை பெய்தது. மணிக்கு 155 முதல் 165 கிலே மீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது.
இந்த புயலால் மேற்கு வங்காளத்தில் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா நகரில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். புயல் சேதங்களை மதிப்பிட 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ள அவர், ஒரு புறம் கொரோனாவுக்கு எதிராக போரிடும் சூழலில், மறுபுறம் புயல் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஇருப்பதாக தெரிவித்துள்ளார்.