நிதி முடக்கத்தை நிரந்தரமாக்குவேன். உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை.!!!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்யும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனாமிற்கு எழுதிய கடிதத்தை, அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், கொரோனா குறித்து சீன அரசாங்கம் வெளியிட்ட முரண்பாடான அறிக்கைகளை, உலக சுகாதார அமைப்பு விசாரிக்க தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில், 2003-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்த ஹார்லெம்(HARLEM) போல் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
This is the letter sent to Dr. Tedros of the World Health Organization. It is self-explanatory! pic.twitter.com/pF2kzPUpDv
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2020
இந்தநிலை நீடித்தால், உலக சுகாதார அமைப்புக்கான நிதியை அமெரிக்கா நிரந்தரமாக நிறுத்தும் எனவும் அந்த அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.