உலகம்தகவல்கள்

3 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப் பலி…!

இதுவரை கொரோனாவால் உலகில் அளவில் 44 லட்சத்து 37 ஆயிரத்து 442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 15 லட்சத்து 85 ஆயிரத்து 286 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்தம் பாதிப்பு: 44,37,442
இதுவரை இறப்பு: 3,02,025*
குணம் அடைந்தவர்கள்: 15,85,286

னாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா தொற்று நோய் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசால் உலக மக்கள் பெரும் சந்தித்துள்ளனர். அனைவரின் இயல்பு வாழ்க்கையை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை இந்த காரணமாக கொரோனா தொற்று நோய்யால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, இன்று களை காலை 6 மணி நிலவரப்படி 3,02,025 ஆக அதிகரித்து உள்ளது.

மனித உயிர்களை பலி வாங்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான விசியமாகும். ஆனால் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இரவு பகல் எனப்பாராமல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 14 லட்சத்து 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் ரஷ்யாவில் 2 லட்சத்து 52 ஆயிரத்திற்கு 245 பேரும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய இராச்சியம் 2 லட்சத்து 33 ஆயிரம் 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழப்புகளைப் பொறுத்தவரை அமெரிக்காவில்தான் அதிகம் நிகழ்ந்துள்ளது. அந்த நாட்டில் இப்போதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 86 ஆயிரத்து 537 பேர் பலியாகியுள்ளனர்.

அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்தில் 33 ஆயிரத்தது 614 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இத்தாலி உள்ளது. அங்கு 31 ஆயிரத்து 368 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவை பொறுத்த வரை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 78,003 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 26,235 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளானர். அதேநேரத்தில் 2,549 பேர் இறந்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.