நந்தியா வட்டை பளீரென்ற வெள்ளை நிறத்துடன் பார்க்கும் போதே கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த செடியின் இலை, மலர். வேர்பட்டை என அனைத்துமே மருத்துவ பயன்களை தருபவை. அழகுக்காக பல வீடுகளில் இவற்றை பார்க்கலாம்.
நந்தியாவட்டை செடிகள் மூன்று வகைகளில் உண்டு. புதர்ச்செடியாகவோ, குறுஞ்செடியாகவோ வளரும். கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இதன் இலைகள் மற்றும் பூக்களை கொண்டு இதை வகைபடுத்துவார்கள். ஓரிதழ், ஈரிதழ், மூவிதழ் என அடுக்குகள் மூலம் இது வகைப்படுத்தப்படுகிறது. மூன்றுமே மருத்துவ குணங்களை ஒத்திருக்க கூடியது தான்.
ஓரிதழ் நந்தியாவட்டை என்பது ஒற்றை அடுக்கு மலரானது. ஐந்து இதழ்களை கொண்டிருக்கும். கொத்து கொத்தாக மலரும். இலைகள் நீளவட்டமாக இருக்கும். செடி போன்று இருக்கும் எனினும் இவை நீர்ச்சத்து மிக்க வளமான பூமியில் பற்றி படரும் போது குறுமரமாக வளர்ந்துவிடும்.சீதபேதிக்கு சிம்பிள் வீட்டுவைத்தியம் என்னன்னு தெரியுமா?
இதை கோவில்களில் அதிகம் பார்க்கலாம். நீர்ச்சத்து இருக்கும் நிலப்பகுதிகளிலும் இவற்றின் வளர்ச்சியும் வளமாக இருக்கும். இரண்டடுக்குகளை கொண்டிருக்கும் இந்த மலரோடு இலை, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கும். மூன்றடுக்கு என்பவற்றின் இலையின் நிறம் அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும். ஆண்டு முழுவதும் இந்த பூக்கள் மலரும்.
நந்தியாவட்டை பூக்கள் மற்றும் இலையிலிருந்து வரும் பால் இரண்டுமே மருத்துவ பயன் நிறைந்தவை. இதனுடைய வேர் கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவையும் கொண்டிருக்கும். உடலில் இருக்கும் சூட்டை கிளப்பி பிறகு சீராக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் நந்தியாவட்டை பயன்படுத்தப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் நந்தியாவட்டையில் அடங்கியிருக்கிறது. அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள் போன்ற வேதிபொருள்களும் சிட்ரிக், ஒலியிக் அமிலங்களும் உண்டு.கண் நோய்களுக்கு சிறந்த தீர்வான இதை கண் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. கண் சிவப்பு இருப்பவர்கள் நந்தியாவட்டை பூ இதழ்களின் சாறு எடுத்து தாய்ப்பால் இரண்டு சொட்டு கலந்து கண்களில் விட்டால் கண் சிவப்பு குணமாகும்.
உஷ்ணத்தால் கண் எரிச்சல் அதிகரிக்கும் போது நந்தியாவட்டை பூவை கண்களில் பொறுமையாக ஒற்றி எடுத்தால் கண் எரிச்சல் குணமாகும். அதிக எரிச்சல் இருப்பவர்கள் நந்தியாவட்டையின் பூக்களை சுத்தம் செய்து சாறு பிழிந்து இரண்டு துளி கண்களில் விடலாம். கண் படலம், மண்டைக்குத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
கண்களில் கட்டி இருக்கும் போது இரவு படுக்கும் போது பூக்களை கண்களில் வைத்து கட்டி மறுநாள் காலை பிரித்தால் கண் கட்டி குணமாகும். கண்கள் குளிர்ச்சியடையும். கண் நோய் வராது. கண் பார்வை கூர்மை பெறும். கண்களில் பூ விழுவதை ஆரம்பத்தில் கண்டறிந்தால் நந்தியாவட்டை பூவுடன், களாப்பூ சேர்த்து நல்லெண்ணெயில் ஊறவைத்து வடிகட்டி அதை பதப்படுத்தி கண்களில் விட்டால் கண்களில் பூ மறையும். சதை வளர்வது கட்டுப்படும். இது முன்னோர்களின் வைத்தியம்.
அழகுக்காக வளர்க்கப்படும் செடிகள் பலவும் இயற்கையாகவே மூலிகை குணங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் உங்கள் வீட்டு மூலிகை செடியுடன் நந்தியாவட்டமும் சேர்த்துவிடுங்கள். நிச்சயம் பலன் உண்டு.