உணவுதகவல்கள்

மீன்களில் ஃபார்மலின் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி???

தமிழ்நாடு முழுதும் பல்வேறு மாவட்டங்களில் மீன்களில் ஃபார்மலின் சேர்க்க படுகிறதா என அறிய பல்வேறு சோதனைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

ஃபார்மலின் என்பது மீன்களின் உடல் சிதைவை தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம் ஆகும். ஃபார்மலின் உண்மையில் சவக்கிடங்குகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. விலங்கு ஆய்வுகளின்படி, ஃபார்மலின்  புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.

மேலும்  ஃபார்மால்டிஹைடால்  வரும்   குறுகிய கால சேதங்கள் : கண்களில் நீர், இருமல், மூச்சுத்திணறல், குமட்டல் மற்றும் தோல் எரிச்சல்.

ஃபார்மால்டிஹைட்  லுகேமியா, இரத்த புற்றுநோய் ,  சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

மீன்களில் ஃபார்மலின் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி???

நிறம்:  கில்கள் சிவப்பு கலந்த மெரூன் கலரில் இருந்தால் , மீன் புதியது, அதே நேரத்தில் மெரூனிஷ்-கருப்பு நிறமாக இருந்தால், மீன் சிதைவடைய ஆரம்பித்திருக்க வாய்ப்பு அதிகம் . அதே நேரத்தில், கில்கள் பிரகாசமான சிவப்பு நிறமாக இருந்தால், மீன் நிச்சயமாக ஃபார்மலின் கொண்டு உள்ளது என கூறலாம்.

துடுப்புகள்: இறைச்சி புதியதாகத் தோன்றும் போது துடுப்புகள் அல்லது வால் சிதைந்த அல்லது சுருங்கிய நிலையில் இருப்பதைக் கண்டால், தவிர்ப்பது நல்லது.

கண்கள்: நீங்கள் எப்போதாவது கவனித்திருந்தால், புதிய மீன்களுக்கு எப்போதும் தெளிவான கண்களுடன்  இருக்கும்,இறந்து சிறிது நேர மான மீன்களின் கண்கள் மங்கலாக  இருக்கும். அவற்றைத் தவிர்க்கவும்.

தன்மை :மீன்களைத் தொடுவதற்கு ரப்பர் போல  இருந்தால் ஃபார்மலின் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம். தொட மென்மையாக இருந்தால், மீன்கள் ஏற்கனவே சிதைவடைய ஆரம்பித்துவிட்டன என அறியலாம்.

மனம் : மீன்களில் அவற்றின் இயற்கையான மனம் வரவேண்டும் ,மாறாக எந்த மனமும் இல்லாமல் இருந்தால் ஃபார்மலின் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

ஈக்கள் :மேலும் ஈக்கள் நிறைந்ததா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.புதிய மீன்களில் ஈக்கள் கூட்டம் மிக்கும் ஆனால் ஃபார்மலின் சேர்க்க பட்ட மீன்களில் ஈக்கள் மிக்காது.

மீன்களிலிருந்து ஃபார்மலினை அகற்றுவது எப்படி???

  • மீன்களில் ஃபார்மலின் நீக்க 10-12 நிமிடங்கள் குழாய் நீரில் (running  water) கழுவ வேண்டும்.
  • மீன் குளிர்ந்த நீரில் குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • மீனை  சமைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 1 மணிநேரம் உப்பு நீரில் மீனை வைத்திருங்கள்.இதன் மூலம்  நச்சு அல்லது ஃபார்மலின் அளவுகளில் 90%  வரை  குறையும்.
குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.