நடிகர் லாரன்ஸ் இரண்டு மூதாட்டிகளுக்கு செய்துள்ள உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் ஹீரோவாகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரின் காஞ்சனா படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். சினிமா மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் செய்வதிலும் இவர் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
இதுவரை கிட்டத்தட்ட ரூபாய் 4 கோடி அளவிற்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே.மேலும் அம்மா உணவகத்திற்கு 50 லட்சம் நீதி உதவி செய்து உள்ளார்.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருப்பதிக்கு நேத்திக்கடன் செலுத்த கிளம்பிய இரண்டு மூதாட்டிகள், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முந்தைய தினம் விழுப்புரத்தில் இறங்கியுள்ளனர். அடுத்த நாளில் இருந்து ரயில்கள் செயல்படாமல் போக, இருவரும் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக திருநெல்வேலி செல்லும் முழு செலவையும் ஏற்று கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் திருநெல்வேலிக்கு வாடகை கார் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். நடிகர் லாரன்ஸ் செய்த இந்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.