ATM மூலமாக இலவச அரிசி வழங்கும் நாடு !! குவியும் பாராட்டுக்கள்…!
கொரோன வெடிப்பு தொடங்கிய சீனாவிலிருந்து 10,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி உள்ளது, எனினும் சீனாவுடன் 1,100 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வியட்நாம், ஜனவரி மாதம் கொரோன தாக்கம் தொடங்கியதில் இருந்து 268 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை.
ஆரம்ப காலத்தில் இருந்தே அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வியட்நாம் அரசு படுதீவிரமாக இருக்கிறது. இதுவரை வியட்நாமில் 268 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க லாக்டவுன் தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் ஆகியவற்றில் அந்நாட்டு அரசு மும்மரமாக கவனம் செலுத்துகிறது.
மேலும் சிறு குறுந்தொழில் நிறுவனங்களையும் வியட்நாம் அரசு மூடியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படி வருவாயை உடனடியாக இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வியட்நாமின் பல நகரங்களில் இலவச அரிசி வழங்கும் ஏ.டி.எம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு தழுவிய பூட்டப்பட்டதைத் தொடர்ந்து ஹோ சி மின் நகரத்தில் உள்ள ஹோங் துவான் அன்(Hoang Tuan Anh) என்ற ஒரு தொழில்முனைவோர் 24/7 தானியங்கி விநியோக இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
எதை தொடர்ந்து பெரும் வர்த்தகர்கள், தன்னார்வலர்கள் இந்த ஏடிஎம் இயந்திரங்களை அமைத்துள்ளனர். ஹனோய் நகரில் வாட்டர் டேங்கில் அரிசி நிரப்பப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் சுமார் 6 அடி இடைவெளிவிட்டுதான் நிற்க வேண்டும் என கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.
ஹூய் நகரில் கல்லூரி ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களுக்காக 2 கிலோ அரிசியை இலவசமாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
ஹோசிமின் நகரத்தில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அரிசி ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதேபோல் வியட்நாமின் பல நகரங்களில் மேலும் பல அரிசி ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
மக்களின் நிலைமையை புரிந்துகொண்ட அத்தியாவசிய தேவையான அரிசியை அனைவரும் பெற எப்பிடியொரு முயற்சியை எடுத்த வியட்நாம் தொழில் அதிபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.