உணவு

பல சிறப்புகளை கொண்ட சிவப்பு அரிசி

தென்னிந்தியாவில்  வாழும் மக்களாகிய நாம் அரிசி தானியத்தையே அதிகம் உணவாக உண்கிறோம் காரணம் இங்கு உள்ள  தட்ப வெப்ப சூழ்நிலை. இந்த அரிசியில் பல வகைகள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் உடலுக்கு பல நன்மைகளை தருபவையாக இருக்கிறது. அந்த அரிசி வகைகளில் ஒன்றான சிவப்பு அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு,

வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

சிவப்பு அரிசி பயன்கள்

சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்கு இன்னொரு  பெயரும் உள்ளது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

ரத்த கொதிப்பு

சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உள்ளது.

நார்ச்சத்து

உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசி உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

புரதம்

சிவப்பு அரிசி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயு உடலின் அனைத்து திசுக்களுக்கும் சென்று சேர்ப்பதையும் நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதச்சத்து செய்கிறது.தினமும் சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட பதார்த்தங்களை காலை உணவாக எடுத்து கொள்வதால் நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்கும் தன்மை நமது உடல் பெறுகிறது.

குழந்தைகள்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சி பெறவும் அவர்கள் சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட சிவப்பரிசி கஞ்சி, சிவப்பரிசி இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதோடு, உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் விரைவில் உடல் எடை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.

ஊட்ட உணவு

சிவப்பு அரிசியில் “புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக சிவப்பு அரிசி இருக்கிறது.

நீரிழிவு

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள வெள்ளை அரிசி போன்றவற்றை அதிகம் சாப்பிட கூடாது. ஆனால் அந்த அரிசிக்கு மாற்றாக நீரிழிவு நோயை நன்கு கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்த சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை காலை மற்றும் மதிய வேளைகளில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

குடல் புற்று

இன்றைய காலங்களில் உலகெங்கிலும் இருக்கும் மக்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.