கரும்பு சாறு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சிறுநீரக தொற்றுகள், சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது.
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். இதற்கு இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மை படுத்தி செரிமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
மேலும் கரும்புச் சாறு உள்ள ஆன்டி-ஸ்ட்ரெஸ் (anti-stress) குணம் நீங்கள் மன அழுத்தம் இல்லாமால் இருக்க உதவும்.
பற்களின் பற்சிப்பியை உருவாக்கவும் பற்கள் வலுவடையவும், ஈறுகளுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது.
இது இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும்.
கரும்பு சாறு ஹோஸ்ட் செல்களுக்குள் வைரஸ், பாக்டீரியா மற்றும் புரோட்டோசோவன் போன்ற பல்வேறு மைக்ரோ-பைல் தொற்றுநோய்கள் உள்ளே நுழையாதவாறு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துகிறது.
கரும்புச் சாறு பல மருத்துவ மதிப்புகள் நிறைந்ததாக இருப்பதால், கரும்பு சாறு ஒரு அதிசய பானமாக கருதப்படுகிறது. கரும்புச் சாறு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சாறு பிரித்தெடுக்கப்பட்டவுடன் அதை உட்கொள்வதும் முக்கியம், ஏனெனில் இது 15 நிமிடங்களுக்குள் ஆக்ஸிஜனேற்றம் ( Oxidisation ) பெற முனைகிறது.