சென்னை : திமுக இளைஞரணி செயலாளர் உதயிநிதி ஸ்டாலினை திமுக பிரமுகர் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு வியூகங்களுடன் ஆளும் கட்சி அதிமுக, எதிர்க்கட்சிகள் திட்டத்தை தீட்டி வருகின்றனர்.
தேர்தல் பணிகளில் அதிமுக ஏற்கனவே களத்தில் குதித்துள்ள நிலையில், திமுகவும் தனது பங்கிற்கு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவில் இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
மேலும்ஒவ்வொரு கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கட்சியை விட்டு கட்சி தாவி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக பிரமுகரான எஸ்வி சேகர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உதயநிதிக்கு இன்று பிறந்தநாள் என்பதால் வாழ்த்து கூற எஸ்வி சேகர் சந்தித்தாரா? அல்லது தனது கொள்கையில் இருந்து விலகி திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்த வந்தாரா என பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற முரளி, தனது குழுவினருடன் முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க சென்றபோது, அந்த குழுவுடன் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உதயநிதியை சந்தித்தாக எஸ்விசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அதே போல, எந்த கட்சியில் நான் சேரப்போவது இல்லை என கூறிய அவர், வெற்றி பெற்ற தயாரிப்பாளர் சங்க குழுவுடன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தும் பேசினார்.