5000 கோடியில் சென்னையில் மேம்பாலம் அமைக்கப்படும்: நிதின் கட்கரி அறிவிப்பு
நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது. தனியார் விடுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு நிதின் கட்கரி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் அரசியல் நிலவரம், பாஜக – அதிமுக கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்.
முன்னதாக அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகத்தில் இருந்து புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 8 இடங்களில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என தெரிவித்தார்.